உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்கரத்தாழ்வார் கோயில்: பழநியில் பூமிபூஜை!

சக்கரத்தாழ்வார் கோயில்: பழநியில் பூமிபூஜை!

பழநி : பழநி லட்சுமிநாராயண பெருமாள் கோயிலில், சக்கரத்தாழ்வார் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. பழநி கோயிலின் உப கோயிலான இந்த கோயிலின் உட்பிரகார தென் மேற்கு மூலையில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சக்கரத்தாழ்வார் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. அனுமதி கோருதல், விஷ்வக்சேனர்பூஜை, புண்ணியாக வாஜனம், கலச பூஜை, வாஸ்து பூஜை, அக்னி பிரதிஷ்டை, தீர்த்தத்தை பூமியில் சேர்த்தல், வாஸ்து ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. வாசுதேவ பட்டாச்சாரியார், வரதராஜ ஐயங்கார், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பூமி பூஜையை செய்தனர், பழநி கோயில் துணை கமிஷனர் மங்கையற்கரசி, கந்தவிலாஸ் செல்வக்குமார், ஜெகதீஸ், பாஸ்கரன், வருத்தமில்லா வாலிபர் சங்க நிர்வாக கமிட்டிதலைவர் ரத்தினம், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் மதனம், செல்லம் கேண்டீன் ராம்ஜி, கான்டிராக்டர் நேரு, சுகுமார் மெட்டல்ஸ் சுகுமாரன், பேஷ்காரர்கள் கருப்பணன், ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !