அலகுகுத்தி அந்தரத்தில் பறந்து வந்த பக்தர்கள்
ADDED :2732 days ago
சேலம்: ஆடித்திருவிழாவில், அலகு குத்திய பக்தர்கள், அந்தரத்தில் பறந்து வந்து, சுவாமியை தரிசித்தனர். சேலம், செவ்வாய்ப்பேட்டை, மாரியம்மன் கோவிலில், ஆடி, 1 முதல், திருவிழா நடந்து வருகிறது. நேற்று அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதை முன்னிட்டு, விரதமிருந்த ஏராளமான பக்தர்கள், காளியம்மன், மாரியம்மன் வேடமணிந்து, முதுகு மற்றும் நாக்கில் அலகுகுத்தி, ஊர்வலமாக வந்தனர். குறிப்பாக, ஏழு பக்தர்கள், சுவாமி வேடத்தில், அலகு குத்திக்கொண்டு, அந்தரத்தில் பறந்தபடி, மேள, தாளங்களுடன் கோவிலுக்கு வந்தனர். அப்போது, வழிநெடுகில் ஏராளமானோர் நின்று பார்வையிட்டனர். இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நாளை, பொங்கல் வைக்கும் விழா நடக்கிறது.