காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் கோமாதா பூஜை
ADDED :2645 days ago
காரைக்குடி : காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி விழா கடந்த 17-ம் தேதி பால்குட நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று 108 கோமாதா பூஜை நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன், பி.எல்.சரவணன் மற்றும் கோயில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.மாலையில் செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வர், கணக்கர் அழகுபாண்டி தலைமையில் திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.