திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :2951 days ago
திருவண்ணாமலை: ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர். விழாவில் பராசக்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.