உத்தரகோசமங்கை கோயிலில் மோட்ச தீபம்
ADDED :2632 days ago
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும், புராதன சிறப்பினையும் பெற்ற சிவாலயமாக விளங்குகிறது. இங்கு நேற்று மாலை 6:00 மணியளவில் மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கோயிலில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க., நிர்வாகிகள், ராமநாதபுரம் மாவட்ட இசை வேளாளர் சங்க நிர்வாகிகள் செல்லம், டி.என்.கணபதி, அரசுமணி, நயினார்கோவில் நாகராஜன், வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.