கடலுார் கோவில்களில் ஆடிப்பூர உற்சவம்
ADDED :2922 days ago
கடலுார்: கடலுார் கோவில்களில் ஆடிப்பூர உற்சவத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. கடலுார் பாடலீஸ்வரர் கோவிலிலும் ஆடிப்பூர உற்சவத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதேபோன்று, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பெருமாள், ஆண்டாள், தேசிகர் சுவாமிகளுக்கு நேற்று காலை திருக்கல்யாணமும், மதியம் சேவை சாற்றுமுறையும் நடந்தது. மாலை திருத்தேரில் ஆண்டாள், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று காலை பெருமாள், ஆண்டாளுக்கு திருமஞ்சனமும், மாலை சுவாமி கோவில் உள்புறப்பாடு நடந்தது.