உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவில் வெள்ளம்: பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு தடை

ஆஞ்சநேயர் கோவில் வெள்ளம்: பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு தடை

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் நா.மூ. சுங்கம் அருகே அமைந்துள்ளது பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில். கோவிலை சுற்றிலும் பாலாறு ஓடுகிறது. கோவில் நடுவில் உள்ள பாறையின் மேல் அமைந்துள்ளது. கோவிலுக்கு, சனிக்கிழமை மற்றும் வைணவ விசேஷ தினங்களில் பக்தர்கள் வருகை அதிகமிருக்கும். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் கன மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர், ஆஞ்சநேயர் கோவிலை சூழ்ந்துள்ளது. கோவிலுக்கு செல்லும் வழித்தடம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்து, வெள்ளம் வடிந்ததும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !