உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலை கோவிலில் நிறம் மாறும் கொடிமர கம்பம்: மெருகேற்ற கோரிக்கை

மருதமலை கோவிலில் நிறம் மாறும் கொடிமர கம்பம்: மெருகேற்ற கோரிக்கை

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள, கொடிமர கம்பம், பராமரிப்பு இல்லாததால் நிறம் மாறி வருகிறது. அதனை மெருகேற்ற பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், பக்தர்களால் முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டுக்கு, 18 கோடி ரூபாய் வருமானம் வருகிறது.இக்கோவிலில், தைப்பூசம், ஆடி கிருத்திகை போன்ற விசேஷ தினங்களில், கொடிமரத்தில் சேவல் கொடி ஏற்றப்பட்டு வருகிறது. சமீபகாலமாக பராமரிப்பின்றி உள்ளதால், கொடிமரத்தின் நிறம் மாறி வருகிறது. இதனை பராமரித்து மெருகேற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !