உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் மாணிக்கவாசகர் புறப்பாடு

மதுரையில் மாணிக்கவாசகர் புறப்பாடு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் பங்கேற்க மேலூர் அருகே திருவாதவூரில் இருந்து மாணிக்க வாசகர் புறப்பட்டார்.

இத்திருவிழாவையொட்டி ஆக., 22 நரியை பரியாக்கும் திருவிளையாடல், ஆக., 23 பிடடுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடக்கிறது. இதில் பங்கேற்கும் மாணிக்கவாசகர் ஆக., 24 திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, ஆக., 25,26 ல் மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் சேர்ந்து
பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

ஆக., 27,28 தல்லாகுளம், உத்தங்குடி மண்டகப்படிகளில் இருந்து விடைபெறுதல் நிகழ்ச்சியும், ஆக., 29 திருமோகூரிலும், ஆக. 30 இடையபட்டியிலும் தங்கி அருள்பாலிக்கிறார்.

ஆக. 31 திருவாதவூர் கோயிலை வந்தடைகிறார். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன், பேஸ்கார் திரவியம் குமார் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !