உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை

திண்டிவனத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை

திண்டிவனம்: திண்டிவனத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தொழுகை நடந்தது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திண்டிவனத்திலுள்ள 15 பள்ளி வாசல்களில் இருந்தும் நேற்று காலை 8 மணியளவில் முஸ்லிம்கள் ஊர்வலமாகசென்று, செஞ்சி ரோட்டில் உள்ள கபர்ஸ்தான் ஈத்கா மைதானத்தில்  சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். நவாப் பள்ளி வாசல் பேஷ் இமாம் ஹாஜி நயாஸ் அகமது தலைமையில், தொழுகை நடந்தது. இதில், ஹஸ்ரத் அபுபக்கர் சித்திக் குப்தா ஓதினார். தொழுகையில்,  பள்ளி வாசல் தலைவர்களான நவால் பள்ளி வாசல் ஹாஜி குலாம் தஸ்தகீர், ஏஜி எஸ்கர் அலி,மதினா பள்ளி வாசல் ஹாஜி சும்சுகான், வழக்கறிஞர் அம்ஜத் அலி, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக பொது செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், முஸ்லிம் உரிமை கழகத்தின் நிறுவன தலைவர் ஜெய்னுதீன்  உள்ளிட்ட 15 பள்ளி வாசல் பேஷ் இமாம்களும், தலைவர்களும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !