பலகை இட்ட வரலாறு
ADDED :2679 days ago
அன்று மதுரையில் சரியான மழை. என்றாலும் இறைவன் திருப்பள்ளி அறைக்கு எழுந்தருளும் போது பாணபத்திரன் கோவிலுக்குப் போய் பாடாதிருப்பதா? இரவின் இருளையும் மழையின் வலிமையையும் பொருட்படுத்தாது நனைந்தவாறே கோவிலுக்கு வந்தான். தான் செய்த சோதனைகளை எல்லாம் வென்று வந்து பாடும் பாணபத்திரனுக்கு இறைவன் நவமணி இழைத்தப் பொற்பலகை வழங்கி, ‘இது உனக்கு உரியது. இதன் மேல் நின்று பாடு’ என்று விண்ஒலி எழுப்பி அருளினார். மறுநாள் காலையில் பாணபத்திரனுக்கு இறைவன் பொற்பலகை வழங்கியதை அறிந்த வரகுணபாண்டியன் தானும் அவருக்கு ஏராளமான பரிசில்களைத் தந்து போற்றி கௌரவித்தான்.