கரிக்குருவிக்கு உபதேசம் செய்த வரலாறு
ADDED :2597 days ago
இராசராச பாண்டியன் காலத்தில் புண்ணியம் பல செய்த ஒருவன் சிறிதளவு பாவமும் செய்ததால் கரிக்குருவியாய்ப் பிறந்தவன். கரிக்குருவி சிவனடியார் ஒருவரின் உபதேசத்தால் மதுரைத் தலத்தின் சிறப்புணர்ந்து மதுரைக்கு வந்தது. பொற்றாமரைக் குளத்தில் நீராடி தினமும் சோமசுந்தரக் கடவுளை வணங்கியது. அதனால் அருள் கூர்ந்த இறைவன் அக்கரிக்குருவிக்கு ‘மிருத்திஞ்சய’ மந்திரத்தை உபதேசித்து எல்லாப் பறவைகளிலும் வன்மையுடைய பறவையாய்த் திகழும் வரமும் தந்தார். தான் மட்டும் இன்றி தன் இனமே வல்லமையுடன் திகழ வேண்டும் என்ற மறுவரமும் இறைவனிடம் கேட்டுப் பெற்றது கரிக்குருவி. எனவே கரிக்குருவிக்கு ‘வல்லான்’ என்ற காரணப் பெயரும் அன்று முதல் வழங்கி வரத் தொடங்கியது.