திருவாலவாய் ஆன வரலாறு
ADDED :2679 days ago
ஊழிக் காலத்திற்குப் பின் மீண்டும் உலகமும் உயிர்களும் படைக்கப்பட்டன. வங்கிய சேகர பாண்டியன் மதுரையில் மக்கள் வாழ இடம் போதாமல் பழைய மதுரை நகர எல்லையைக் காட்டி அருளுமாறு சோமசுந்தரக் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டான். சித்தர் உருவம் ஏற்று வந்த இறைவன் தன் கையில் கங்கணமாய் அமைந்துள்ள பாம்பை விடுத்து பாண்டியனுக்கு நகர எல்லை காட்டுமாறு பணித்தார். பாம்பும் கிழக்கே சென்று வாலை நீட்டி வலமாய் உடலை வளைத்து வாலைத் தனது வாயில் வைத்து நகர எல்லையைக் காட்டியது. எனவே மதுரை திருவாலவாய் எனும் பெயரும் பெற்றது.