ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா
திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோடு, காளியப்பா நகர் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் விழா, வேத மந்திரங்கள் முழங்க, கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீராஜகணபதி கோவிலில், பரிவாரமூர்த்தி களுக்கு தனி சன்னதி அமைத்தல் உட்பட பல திருப்பணி நிறைவுற்று, 22ம் தேதி, கணபதி ேஹாமம், கோமாதா பூைஜ யுடன், கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. பட்டத்தரசியம்மன் கோவிலிலிருந்து தீர்த்தக்கலசம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து யாக சாலை பூஜைகள் துவங்கின. நேற்று, அதிகாலை நான்காம் கால யாக பூஜைகளும், தொடர்ந்து 7:45 மணிக்கு கோபுர கும்பாபிஷேகமும் நடைபெற்றது. சிவாச்சார்யார்கள் வேதமந்திரங்கள் முழுங்க, கோபுர விமானம், மற்றும் மூலவர், பரிவாரமூர்த்திகளுக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், தச தானம், தச தரிசனம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடத்த, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர், திருப்பணிக்குழுவினர் தெரிவித்தனர்.