கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் திருப்பவித்ரோத்ஸவ ஹோமம்
ADDED :2603 days ago
கரூர்: கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், நேற்று முன் தினம், திருப்பவித்ரோத்ஸவ ஹோமம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை துவங்கிய ஹோமத்தில் மூன்று கட்ட பூஜைகள் நடந்தன. இரவு, கும்ப ஆராதனம், சாந்தி ஹோமத்துடன், இரண்டாம் நாள் யாகம் நிறைவடைந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு மூன்றாம் நாள் யாகம் துவங்குகிறது. 7:35 மணிக்கு, பெருமாள் திருவீதி உலா புஷ்பாஞ்சலியுடன் ஹோமம் நிறைவடைகிறது.