ஓணம் வந்தல்லோ!
ADDED :2705 days ago
கேரளாவில் மழை வெள்ளம் பாதிப்பு ஒரு புறம் கவலையை ஏற்படுத்தினாலும், தங்கள் வழக்கமான பாரம்பரிய கொண்டாட்டத்தை மறக்கவில்லை கோவையில் வசிக்கும் கேரள மக்கள். வெள்ளலுார், எல்.ஜி., மெட்ரிக் பள்ளியில், ஓணம் கொண்டாடி மகிழ்ந்தனர். பெற்றோர் திரளாக பங்கேற்ற இவ்விழாவில், ஓணம் பண்டிகையின் முக்கியத்துவம், உணவு முறைகள், அதற்கான காரணங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. மகாபலி மன்னனின் வாழ்க்கையை சித்தரித்து, மாணவர்கள் நாடகம் அரங்கேற்றினர். விழாவில் பங்கேற்ற, பள்ளி முதல்வர் கணஷே், துணை முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர், மாணவ மாணவியரின் திறமையை கண்டு தங்களையும் அறியாமல் கைதட்டி ரசித்தனர்.