பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பினார் முருகன்
ADDED :2932 days ago
திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் பாண்டியராஜாவாக பங்கேற்க ஆக., 22ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து புறப்பாடாகினர். திருவிழா முடிந்து ஆக.,26ல் விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை நெல்பேட்டை மண்டபத்தில் சுவாமி, தெய்வானை அம்மன் எழுந்தருளினர். அங்கு அபிஷேகம், பூஜை முடிந்து சர்வ அலங்காரமாகி பூப்பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருப்பரங்குன்றம் கோயில் வந்தடைந்தனர்.