குடிகிணறு விநாயகர் கும்பாபிஷேக விழா
ADDED :2598 days ago
அன்னுார்: கரியாம்பாளையம் ஊராட்சி, சுக்ரமணிக் கவுண்டன் புதுாரில், 300 ஆண்டுகள் பழமையான குடிகிணறு விநாயகர் கோவில் உள்ளது. சமீபத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டதை தொடர்ந்து, கும்பாபிஷேக விழா இன்று துவங்குகிறது.மாலை, தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி கொண்டு வருதல், முதல்கால யாக பூஜை, எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. நாளை காலை, 6:00க்கு விநாயகருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. பின் மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது.