உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சக்தி குமரன் கோயில் கும்பாபிஷேகம்

பரமக்குடி சக்தி குமரன் கோயில் கும்பாபிஷேகம்

பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வைகை ஆற்று படித்துறை சக்திக்குமரன் செந்தில் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஆக.26ல் காலை 5:00 மணிக்கு மகாகணபதி பூஜையுடன் விழா துவங்கியது. இரவு வாஸ்துசாந்தி பூஜை நடந்தது. மறுநாள் காலை 6:00 மணி முதல் மகாலட்சுமி ேஹாமம் , பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு புனித மண் எடுத் தல், காப்புக்கட்டுதல், கலாகர்சனம், யாத்ராதானம் மற்றும் வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப் பட்டு யாகசாலை பிரவேசம் நடந்தது. ஆக., 28ல் யாகபூஜைகளும், விக்ரக பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது.

தொடர்ந்து நேற்று காலை கோபூஜை, லெட்சுமி பூஜை க்குப் பின்னர் நான்காம் காலயாக பூஜைகள், மகா பூர்ணாதிக்குப்பின் யாகசாலையில் இருந்து குடங்கள் புறப்பாடாகின. காலை 10:25 மணிக்கு பக்தர்களின் அரோகரா கோஷத்திற்கு மத்தியில் மகா கும்பாபிஷேகம்நடந்தது. 11:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சுப.இலக்குமணன் தலைமையில் செய்திருந்தனர். விழாவில் செந்திலாண்டன் வழிபாட்டு அறக்கட்டளை நாகராஜன், முருகானந்தம், செந்திலாண்டன் மிதிவண்டி பயணக்குழு, ஐயப்பன் வழிபாட்டு மன்றம், கல்வி சேவா அறக்கட்டளையினர்ஆகிய பலர் கலந்து கொண்டனர்.

* மேலத்தெரு சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை 10:15 மணிக்கு நடந்தது. ஏற் பாடுகளை பரம்பரை அறங்காவலர் அனந்தநாராயணன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !