சங்கப் பலகை கொடுத்த வரலாறு
ADDED :2591 days ago
பிரம்மனின் சாபத்தால் சரஸ்வதி 49 சங்கப்புலவர்களாகப் பிறந்தாள். இப்புலவர்கள் மதுரையில் சங்கம் அமைத்து வரும் புலவர்களுடன் வாதிட்டு புலமைத் தகுதியை நிர்ணயித்து வந்தனர். இப்பணிக்கு சீர்தூக்கி அளிக்கும் கருவியாய்ச் சங்கப்பலகை தந்தருளுமாறு சோமசுந்தரனைப் புலவர்கள் வேண்டினர் இறைவனும் தெய்வீகச் சங்கப்பலகை ஒன்றை புலவர்களிடம் தந்தான். ஒரு முழச்சதுரம் உள்ள இப்பலகை தகுதி மிக்க ஒவ்வொருவருக்கும் ஒரு முழம் வளர்ந்து இடம் தரக்கூடியது.