தருமிக்குப் பொற்கிழி அளித்த வரலாறு
ADDED :2673 days ago
சண்பகப் பாண்டியன் மனதில் ஓர் ஐயம் எழுந்தது. “தன் அரசியின் கூந்தலில் உள்ள மணம் இயற்கையானதா? செயற்கையானதா? என்பதே அச்சந்தேகம். தன் மனதில் உள்ள சந்தேகத்தைத் தீர்ப்போருக்கு ஆயிரம் செம்பொன் அடங்கிய முடிப்பு தருவதாக அறிவித்தான் பாண்டியன். தருமி ஏழைப் பிரம்மச்சாரி. அவன் சோமசுந்தரக் கடவுளின் திருமுன்வந்து திருமணம் செய்து கொள்ள விரும்புவதால் அப்பணமுடிப்பைத் தனக்கேப் பெற்றுத்தருமாறு!” வேண்டினான். இறைவனும் செய்யுள் ஒன்றை இயற்றித்தந்தார்.
இறைவனின் செய்யுளில் பொருட் குற்றம் கண்டுமறுத்தான் நக்கீரன். மனமொடித்த தருமி இறைவனிடம் முறையிட, புலவர் வேடந்தரித்து அரசவைக்கு வந்தார் இறைவன். நக்கீரனுடன் வாதிட்டார். சினத்தில் நெற்றிக்கண்ணைத் திறந்தார். வெம்மை தாளாது பொற்றாமரைக் குளத்தில் போய் விழுந்தான் நக்கீரன். இறைவன் மறைந்தான்.