சங்கத்தார் கலகம் தீர்த்த வரலாறு
ADDED :2591 days ago
சங்கப் புலவர்கள் தத்தம் பாடலே சிறந்தது எனக் கூறி தங்களுக்குள் கலகம் செய்து கொண்டனர். கடைசியில் கலகம் தீர வழிகாட்டுமாறு சோமசுந்தரக் கடவுளை வேண்டினர். இறைவன் தனபதியின் மகனும் - ஊமையும் - சிறுவனுமான ஒருவனைக்காட்டி இவன் முருகனின் அவதாரம். இவன் சிறந்த பாடல்களைக் கேட்டால் தலை அசைத்து ரசிப்பான். இவன் துணையால் உங்கள் கலகத்தை தீர்த்துக் கொள்வீர்!” என்றருளி மறைந்தார். புலவர்களும் அவ்ஊமைச் சிறுவன் முன் தம் படைப்புக்களை படைத்துக் காட்டி தகுதியை முடிவு செய்து வரலாயினர்.