உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாதவூரடிகளுக்கு உபசரித்த வரலாறு

வாதவூரடிகளுக்கு உபசரித்த வரலாறு

அமாத்தியர் குடியில் தோன்றிய திருவாதவூரார் பாண்டியனின் முதலமைச்சராய்ப் பணியாற்றினர். ஒருநாள் மன்னர் மிகுந்த பொருள் தந்து குதிரைகளை வாங்கி வருமாறு அனுப்பினார். குதிரை வாங்கப்பட்ட திருவாதவூராரை இறைவன் ஞானாசிரியர் வடிவில் திருப்பெருந்துரை என்னும் தலத்தில் ஆட்கொண்டு உபதேசித்தார். ஞான உபதேசம் பெற்ற திருவாதவூராரர் குதிரை வாங்க கொண்டு வந்த பொருளை எல்லாம் கோவில் கட்டவும், சிவதருமங்கள் செய்யவும் செலவழித்து ஊர் திரும்பினார். மன்னரிடம், குதிரைகள் வந்து கொண்டிருக்கின்றன என்று கூறி பாரத்தை இறைவன் மீது போட்டுவிட்டு அமைதியாய் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !