மண் சுமந்த வரலாறு
ADDED :2674 days ago
வெள்ளத்தைத் தடுக்க அவரவர் பங்குக் கரையை அடைக்குமாறு ஆணையிட்டான் பாண்டியன். பிட்டு விற்கும் வந்திக்கிழவி தனக்கு அளந்து விட்ட பங்கை அடைக்கக் கூலி ஆள் கிடைக்காது வருந்தினான். அப்போது இறைவன் கூலிக்காரன் வேடத்தில் பிட்டுக்கு மண் சுமக்க வந்தார். பிட்டை உண்டார். மண்சுமக்காது உறங்கினார். செய்தி அறிந்து கோபம் கொண்டான் பாண்டியன். தன் கையில் இருந்த பிரம்பால் அவனை அடித்தான். அவன் மேல்பட்ட அடி அண்ட சராசரங்களிலும் உள்ள எல்லா உயிர்கள் மீதும் பட்டது. பின் அவன் ஒரு கூடை மண்ணைச் சுமந்து ஆற்றில் கொட்டியதும் வெள்ளம் அடங்கியது. மண்ணைச் சுமந்தவனும் மறைந்தான்.