ஈரோடு கோவிலில் ஆவணி கிருத்திகை கோலாகலம்
ADDED :2647 days ago
ஈரோடு: ஆவணி மாத கிருத்திகையை ஒட்டி, ஈரோடு, டி.வி.எஸ்., வீதியில் உள்ள மகிமாலீஸ்வரர் கோவிலில், கல்யாண சுப்பிரமணியருக்கு, காலை, மாலை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து, திருவீதியுலா நடந்தது. மயில் வாகனத்தில் எழுந்தருளிய கல்யாண சுப்பிரமணியர், மணிக்கூண்டு, பி.எஸ்.பார்க், பிரப்ரோடு, பெரிய மாரியம்மன் கோவில், காமராஜர் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, வழியாக திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.