மானாமதுரையில் மாணவர்களுக்காக விதை விநாயகர் தயாரிப்பு
மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக விதை விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
மானாமதுரையில் வருடந்தோறும் சீசனிற்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு பல இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. கார்த்திகை விளக்குகள்,மண் கூஜாக்கள்,சமையல் பொருட்கள், விநாயகர் சிலைகள் அழகிய வடி வமைப்புடன் செய்யப்பட்டு வருகின்றன.
வரும் 13 ந் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்திக்காகவிநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவர் அங்குள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 700 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்காக மானா மதுரையில்பரமேஸ்வரி 47,என்ற மண்பாண்ட தொழிலாளியிடம் 800 விதை விநாயகர் சிலைகளை தயாரிக்க ஆர்டர் கொடுத்துள்ளார்.
இதனை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பரமேஸ்வரி கூறியதாவது,சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரையும் வகையில் சுத்தமான களிமண்ணால் தயார்
செய்யப்பட்டு சிலைகளுக்கு அடியில் ஓட்டை வைத்து கொடுக்கப்படுகிறது,
அந்த ஓட்டைக்குள் விதைகளை வைத்து பின்னர் களிமண்ணால் மூடி அதனை மாணவர் களுக்கு வழங்கலாம், என்றார்.