உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடியில் இருந்து 600 காவடிகளுடன் பழநிக்கு பாதயாத்திரை!

காரைக்குடியில் இருந்து 600 காவடிகளுடன் பழநிக்கு பாதயாத்திரை!

சிவகங்கை: தைப்பூச விழாவிற்காக, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட நகரத்தார், நாட்டார்கள், காவடியுடன் பழநி சென்றனர். ஆண்டுதோறும் பழநியில் நடைபெறும் தைப்பூச விழாவில் பங்கேற்க, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, காரைக்குடி, பள்ளத்தூர், கோட்டையூர் பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நகரத்தார்கள், கடந்த 400 ஆண்டுகளாக காவடி ஏந்தி, காரைக்குடி, குன்றக்குடி வழியாக பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். நேற்று அவர்கள், நவரத்தின வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, தேவகோட்டையில் காவடி ஏந்தி, பாதயாத்திரையை துவக்கினர். ஒவ்வொரு மண்டகப்படியிலும் அமர்ந்து, இவர்கள் பிப்., 6ல் பழநி செல்வர். மறுநாள் தைப்பூச விழாவில் பங்கேற்று, திரும்புவர். இதே பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நாட்டார்களும் நேற்று குன்றக்குடியில் இருந்து காவடியுடன் பாதயாத்திரையை துவக்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !