உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசியில் வரம் தரும்... மேற்கு திசை விநாயகர்

சிவகாசியில் வரம் தரும்... மேற்கு திசை விநாயகர்

சிவகாசி: எந்த ஒரு செயலையும் தொடங்க வேண்டுமென்றால் பிள்ளையார் சுழி போட்டு தொடங்க வேண்டும் என்பர். முழு முதற்கடவுள் விநாயகரே. பொதுவாக எப்பொழுதுமே விநாயகர் கிழக்கு திசை பார்த்துதான் அமர்ந்திருப்பார். ஆனால் சிவகாசி பழைய தீயணைப்பு நிலையம் அருகே அமைந்துள்ள சிவ பால விநாயகர் மேற்கு திசையில் முகம் காட்டி அமர்ந்திருக்கிறார். சிவனுடைய பாலகன் விநாயகரே சிவ பால விநாயகர்.

100 வருடங்கள் பழமையான இக் கோயிலை சிவகாசி தீயணைப்பு நிலைய ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். மேற்கு திசை பார்த்து விநாயகர் அமர்ந்திருப்பதால் இங்கு அதிக பக்தர்கள் வருகின்றனர். குழந்தைப் பேறு, வியாபார விருத்தி போன்றவை களுக்கு இங்கு வந்து விநாயகரை வணங்கினால் உடனடியாக நினைத்தது நடக்கிறது என்கின்றனர் பக்தர்கள்.

கேட்ட வரம் உடனடியாக கிடைப்பதால் பக்தர்கள் பலரும் போட்டி போட்டு சேவை செய் கின்றனர். தொழில் நகரமான சிவகாசியில் பட்டாசு , தீப்பெட்டி உள்பட சிறிய மற்றும் பெரிய பல்வேறு தொழில்கள் நடக்கின்றன. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் வணங்கினால் உடனடியாக நிவர்த்தி செய்கிறார். கோயிலில் தினமும் காலை 7:30 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். வெள்ளி, செவ்வாயில் இரவு 7:00 மணிக்கும் சிறப்பு பூஜை நடைபெறும். ஒவ்வொரு மாதமும் வரும் மகா சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு உகந்த நாட்களாகும். அன்றைய தினம் வெகு சிறப்பாக பூஜை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !