உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோட்டில் 16ல் சத்சங்க தியானம்: பங்கேற்க அழைப்பு

ஈரோட்டில் 16ல் சத்சங்க தியானம்: பங்கேற்க அழைப்பு

ஈரோடு: அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை சார்பில், ஈரோட்டில், வரும், 16 காலை, 6:30 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மகாமந்திர சத்சங்க தியான நிகழ்ச்சி நடக்கவுள்ளது. ஈரோடு, பஸ் ஸ்டாண்ட் அருகே, செல்லாயியம்மாள் திருமண மண்டபத்தில் காலை முதல் தியானம், யோகாசனம், சத் சங்கம் மற்றும் பக்தி நிகழ்ச்சி நடக்கிறது.காலையில் பயிற்சியில் பங்கேற்கலாம். உணவு உட்கொள்ளாமல் வர வேண்டும். ஒரு பெட்ஷீட் எடுத்து வர வேண்டும். 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அனுமதியில்லை. பயிற்சியில் பங்கேற்போருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்புவோர், 0424 2251706, 2251708 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !