முன்னுரிமை எங்களுக்கே!
ADDED :2595 days ago
1941ல் நாகப்பட்டினத்தில் காஞ்சிப் பெரியவர் இருந்த போது, அங்குள்ள விநாயகர் கோயிலில் பெரியவருடன் வந்த சிலர் சிதறுகாய் உடைக்க முன்வந்தனர். இதை கவனித்த சிறுவர்கள் சிலர் தேங்காயை எடுக்க விரைந்தனர். பெரியவர் மீது சிறுவர்கள் இடித்திடக் கூடாதே என்ற பயத்தில் அங்கிருந்த பக்தர்கள் சிறுவர்களை விரட்டினர். உடனே ஒரு சிறுவன் ஆவேசமாக ‘பிள்ளையாருக்கு உடைத்த சிதறுகாயை எடுக்க கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அதை எடுக்க வரத்தான் செய்வோம்” என்றான். சிறுவனின் பேச்சில் இருந்த நியாயத்தை பெரியவரும் ஏற்றுக் கொண்டார். விநாயகர் வழிபாட்டில் குழந்தைகளுக்கே முன்னுரிமை என்பதை அங்கிருந்தவர்கள் உணர்ந்தனர். விநாயகரை வழிபட பலன் உடனடியாகக் கிடைக்கும் என்பதால் ’கணபதி பூஜை கைம்மேல் பலன்’ என்று பழமொழியாகச் சொல்வர்.