உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னி ராசி என் ராசி

கன்னி ராசி என் ராசி

பிறந்த நேரத்தை வைத்து நாம் ஜாதகம் கணிப்பது போல கடவுளுக்கும் ஜாதகம் உண்டு. விநாயகரின் நட்சத்திரம் அஸ்தம் என்பதால் கன்னி ராசிக்கு உரியவராகிறார்.  இவருடைய ஜாதகத்தில் கடகத்தில் குருவும், மகரத்தில் செவ்வாயும், கன்னியில் புதனும் உச்சபலத்துடன் உள்ளனர். சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். செவ்வாய்க்குரிய விருச்சிகமே இவரது லக்னம். விநாயகரின் ஜாதகத்தை பூஜித்தால் நல்ல புத்தி உண்டாகும். முயற்சியில் குறுக்கிடும் தடை  நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். வளர்ந்து முற்றிய வெள்ளெருக்குச் செடியின் வேரில் விநாயகர் உருவம் சுயம்புவாக உருவாகும். இவரை வழிபட்டே சித்தர்கள்  அஷ்டமாசித்தி பெற்றனர். நடனக்கலையில் வல்லவரான சிவனைப் போல விநாயகரும் நாட்டியம் ஆடுவதில் வல்லவர். இந்த நர்த்தன விநாயகரை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி உக்கிர தெய்வமாக இருந்த போது, ஆதிசங்கரர் அம்மனுக்கு எதிரில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார்.  ’உக்கிரம் தணித்த விநாயகர்’  என்னும்  இவரை வழிபட்டால் மனம் அமைதி பெறும். ’காங்கி டெக்’ என்னும் புத்தமதக் கடவுளுடன் இணைந்து அருள்புரியும் விநாயகர் ’கவான்வின் ஷேர் விநாயக்ஷா’ எனப்படுகிறார். ஜப்பானில் உள்ள யோகப் பயிற்சியாளர்கள் இவரை விரும்பி வழிபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !