கள்ளக்குறிச்சியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
ADDED :2692 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி போலீஸ் துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு டி.எஸ்.பி., கோமதி தலைமை தாங்கி ஆலோசனைகள் வழங்கினார்.
இன்ஸ்பெக்டர்கள் சின்னசேலம் சண்முகம், தியாகதுருகம் மூர்த்தி முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வரவேற்றார்.
கூட்டத்தில் அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே விநாயகர் சிலை வைக்க வேண்டும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வகையிலான சிலைகளை பயன்படுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாதவாறு அமைதியான முறையில் ஊர்வலம் நடத்த வேண்டும். ஊர்வலம் ஏற்கனவே சென்ற வழிதடம் வழியாக செல்ல அறிவுருத்தப்பட்டது. கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார விநாயகர் சதுர்த்தி விழாக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.