உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் விநாயகர் சிலைகள் விலை உயர்வு

பழநியில் விநாயகர் சிலைகள் விலை உயர்வு

பழநி: பழநியில் இவ்வாண்டு மண் தட்டுப்பாடு காரணமாக, விலை உயர்ந்துள்ளதால் பழநியில் விநாயகர் சிலைகள்  குறைந்தபட்சம் ரூ.80 முதல் அதிகபட்சமாக ரூ. 3ஆயிரம் வரை விற்பனை யாகிறது.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, களிமண், மாவினால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீடுகள், வணிக வளாகங்கள், கோயில்களில் வைத்து வழிபாடு செய்து, ஆறு, குளங்கள், கிணற்றில் கரைப்பது வழக்கம்.

இவ்வாண்டு நாளை (செப். 13ல்) விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பழநியில் அரை அடி முதல் 4அடிவரை உயரமுள்ள களிமண்ணில் தயாரான சிலைகள் தர்மபுரி, மதுரை, திருப்பூர் பகுதியில் இருந்து விற்பனைக்கு வந்துள்ளன. மண் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு ரூ. 60க்கு விற்ற அரையடி சிலை இந்தாண்டு ரூ.80 முதல் ரூ.100வரை வேலைப்பாடுக்கு தகுந்த மாதிரி விற்கப்படுகிறது.

பழநி அடிவாரம் வியாபாரி மகாலட்சுமி கூறியதாவது: தர்மபுரியில் இருந்து வாங்கி களி மண்ணால் உருவாக்கிய விநாயகர் சிலைகளை விற்கிறோம். லேசான சாரல் மழை பெய்தால் கூட சிலைகள் கரைந்து விடும். ரூ.100 முதல் சிலைகள் உள்ளன, அதிகபட்சமாக மூன்றரை அடி விநாயகர்சிலை ரூ.3ஆயிரம் ஆகும். மண் தட்டுப்பாடால் விலை உயர்ந்துள்ளது. இன்றும் நாளையும் (செப்., 12ல், 13ல்) வியாபாரம் களைக்கட்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !