உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி ஊராட்சியில் ஜாத்திரை கங்கையம்மன் ஜாத்திரை பக்தர்கள் நேர்த்தி கடன்

திருத்தணி ஊராட்சியில் ஜாத்திரை கங்கையம்மன் ஜாத்திரை பக்தர்கள் நேர்த்தி கடன்

திருத்தணி:மூன்று ஊராட்சிகளில், கங்கையம்மன் ஜாத்திரை நேற்று (செப்.,11ல்) நடந்தது.

திருத்தணி ஒன்றியம், மத்தூர், புச்சிரெட்டிப்பள்ளி மற்றும் முருகூர் ஆகிய மூன்று ஊராட்சி களில், கங்கையம்மன் ஜாத்திரை நேற்று (செப்., 11ல்) நடந்தது. காலையில், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் பூ கரகம் ஊர்வலம் நடந்தது.

மாலையில், பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு, 8:00 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூ கரகத்துடன் கிராமங்கள் தோறும்
வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் உடல் முழுவதும் வேப்பிலை கட்டியும், அக்னி சட்டி மற்றும் கும்பம் எடுத்துச் சென்றும், நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு, 10:00 மணிக்கு, நாடகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !