பிரம்மோற்சவ விழா: ஜொலிக்கிறது திருமலை
ADDED :2578 days ago
திருப்பதி: திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் நாளை (செப்.,13) துவங்கவிருப்பதை முன்னிட்டு கோயில் முழுவதும் வண்ணவிளக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஜொலி ஜொலிக்கிறது. மேலும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் பிரம்மாண்ட மலர்க்கண்காட்சிக்காக பூங்காவும் தயராகிக்கொண்டு இருக்கிறது. இந்த மலர்க்கண்காட்சியின் ஒரு பகுதியில் வாமனரின் மணல் சிற்பத்தை வடிவமைப்பதில் மைசூர மாணவியர் ஈடுபட்டுள்ளனர்.