உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் அம்மன் கோவில் உண்டியல் உடைப்பு ரூ.1.25 லட்சம், நகைகள் கொள்ளை

சேலம் அம்மன் கோவில் உண்டியல் உடைப்பு ரூ.1.25 லட்சம், நகைகள் கொள்ளை

சேலம்: சேலம், குகை மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து, 1.25 லட்சம் ரூபாய், நகைகளை, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.சேலம், குகை மாரியம்மன், காளியம்மன் கோவில்களுக்கு, தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். அவர்கள், காணிக்கை செலுத்த வசதியாக, மாரியம்மன் மூலஸ்தானம் அருகே, பெரிய உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (செப்., 15) இரவு, 10:30 மணிக்கு, காவலாளி ஆறுமுகம், கோவில் கதவுகளை பூட்டி, வீட்டுக்கு சென்றார். நேற்று (செப்., 16ல்)அதிகாலை, 5:45 மணிக்கு, அவர் கோவிலுக்கு வந்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, காசுகள் சிதறிக் கிடந்தன. செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.அங்கிருந்த, சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், மூன்று பேர் முகத்தை மூடியபடி, அதிகாலை, 1:10 மணிக்கு வந்து, கேமராவை திருப்பி விட்டு, உண்டியலை கம்பியால் உடைத்தது தெரிந்தது. மோப்பநாய் ஜூலி, ராமலிங்க மடாலய தெரு வரை சென்று திரும்பியது. கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். கோவில் ஊழியர்கள் கூறியதாவது:மாரியம்மன், காளியம்மன் கோவில் ஆடிப் பண்டிகை, ஆண்டுதோறும் ஆகஸ்டில் முடியும். அதன்பின், உண்டியல் எண்ணப்படும் பட்சத்தில், 1.25 முதல், 1.40 லட்சம் ரூபாய், 50 கிராம் தங்கத்தாலான பொட்டுத்தாலி, 400 கிராம் வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்கள், காணிக்கையாக கிடைக்கும்.நடப்பாண்டு ஆடி பண்டிகை முடிந்த நிலையில், உண்டியல் எண்ணப்படாததை அறிந்து, கொள்ளையர்கள் கைவரிசை காட்டி யுள்ளனர். இதே அளவு நகை, பணம் கொள்ளை போய் இருக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !