கமுதியில் மழை பெய்ய வேண்டியும் உலக அமைதிக்காகவும் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :2574 days ago
கமுதி: மழை பெய்ய வேண்டியும், உலக அமைதிக்காகவும் கமுதி எட்டுக்கண் பாலம் அருகே உள்ள மேல்மருத்துவர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்தனர். மேலும் பால்குடம், கஞ்சி களையம், அக்னி சட்டிகளுடன் ஊர்வலம் வந்து குண்டாற்றில்
முளைப்பாரியை கரைத்தனர். ஆதிபராசக்தி கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், பிரசாதங்கள் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.