வத்திராயிருப்பு அருகே ரோட்டில் ஐம்பொன் அம்மன் கவசங்கள்
ADDED :2571 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியிலிருந்து கோட்டையூர் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ஓனான்குட்டம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் (செப்.,18 ல்) இரவு ஒரு வெள்ளைத்துணிப்பை கிடந்தது. அவ்வழியாக சென்ற நபர் எடுத்து பார்த்தபோது உள்ளே ஐம்பொன்னால் ஆன அம்மன் கவசங்கள் இருந்துஉள்ளன. தங்கம் என நினைத்து அவற்றை வத்திராயிருப்பு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.கோயில்களில் மர்மநபர்கள் யாராவது திருடிச்சென்றபோது தவறி விழுந்திருக்கலாம் எனக்கருதி, அருகில் உள்ள கோயில்களில்விசாரணை செய்கின்றனர்.