உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு, மேட்டூர் ரோட்டில் உள்ள பூம்புகாரில் கொலு பொம்மை கண்காட்சி துவக்கம்

ஈரோடு, மேட்டூர் ரோட்டில் உள்ள பூம்புகாரில் கொலு பொம்மை கண்காட்சி துவக்கம்

ஈரோடு: ஈரோடு, மேட்டூர் ரோட்டில் உள்ள, பூம்புகார் விற்பனை நிலையத்தில், கொலு பொம்மை கண்காட்சி, நேற்று 23ல் துவங்கியது. இதுபற்றி, மேலாளர் சரவணன் கூறியதாவது: அக்.,18ல் விஜய தசமி விழா நடக்க உள்ளது. இதற்காக கொலு பொம்மை கண்காட்சி தொடங்கியுள்ளது. அக்.,19 வரை நடக்க உள்ளது. களிமண், காகிதக்கூழ் பொம்மைகள், மரச்சிற்பங்கள், வெண்கலம், ஐம்பொன் சிற்பங்கள் விற்பனைக்காக உள்ளன. களிமண் பொம்மைக்கு ஜி.எஸ்.டி., வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொம்மைகளுக்கும், 10 சதவீத கழிவு வழங்கப்படும். இந்தாண்டு புதுமையாக, லவகுசா பொம்மை, ஐஸ்வர்ய லட்சுமி, விஸ்வரூப மகா விஷ்ணு, அசோகவன சீதை, கபடி விளையாடும் கிருஷ்ணன், கல்யாண செட், பள்ளிக்கூடம், திருதராஷ்டிரர் சபை, மீனாட்சி திருக்கல்யாணம், தசாவதாரம் உட்பட பல புதிய பொம்மைகள் வந்துள்ளன. ஞாயிறு உட்பட அனைத்து நாட்களும் கண்காட்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !