உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி ராமர் கோவிலில் பட்டாபிஷேக விழா கொண்டாட்டம்

வீரபாண்டி ராமர் கோவிலில் பட்டாபிஷேக விழா கொண்டாட்டம்

வீரபாண்டி: தர்ம ரக்ஷன சமிதி சார்பில், ராமாயண ஞான வேள்வி பெயரில், கோவில்களில் தொடர் சொற்பொழிவு நடத்தப்படுகிறது. அதன்படி, வீரபாண்டி, அங்காளம்மன் கோவிலில், கடந்த, 17 முதல், நேற்று (செப்., 23) வரை, அக்கரபாளையம் தச்சங்காடு துரைசாமி, சொற்பொழிவு நிகழ்த்தினார்.

நேற்று (செப்., 23) மாலை, அருகிலுள்ள, ராஜகணபதி கோவிலிலிருந்து சீர்வரிசைகளுடன், ஸ்ரீராமர் பட்டாபிஷேக மகுடம் அலங்கரித்து, கோவிலுக்கு, ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்கு, ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன், பரதன், சத்ருக்கன் சிலைகளுக்கு பூஜை செய்து, மேள, தாளம் முழங்க, ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !