கோபி பாரியூர் வகையறா கோவில்களில் பிளாஸ்டிக் பை பயன்படுத்த தடை
ADDED :2568 days ago
கோபி: பாரியூர் வகையறா கோவில்களில், பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதித்து, கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோபி அருகே பாரியூரில், பிரசித்தி பெற்ற கொண்டத்துகாளியம்மன் வகையறா கோவில் உள்ளது.
தமிழகத்தில், 2019 ஜன.,1 முதல், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை, தற்போதே கடைபிடிக்க, கோவில் நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. பக்தர்கள் பூஜை பொருட்களை, பாலித்தீன் கவர்களில், கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இனி பிளாஸ்டிக் பைகளை, பயன்படுத்த கோவில் நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
இதற்கு மாறாக, துணிப்பை, மூங்கில் கூடை மற்றும் ஒயர் கூடைகளை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இதை வலியுறுத்தி, பாரியூர் வகையறா கோவில்களில், ஐந்து இடங்களில், பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.