உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளோடு கோவிலில் சிலைகள் அகற்றம்: போலீசார் கும்பகோணம் எடுத்து சென்றனர்

வெள்ளோடு கோவிலில் சிலைகள் அகற்றம்: போலீசார் கும்பகோணம் எடுத்து சென்றனர்

சென்னிமலை: வெள்ளோடு கோவிலில் இருந்த சாமி சிலைகளை அகற்றி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கும்பகோணம் எடுத்து சென்றனர்.

வெள்ளோடு ராஜா சுவாமி கோவிலில், 14 கற்சிலைகள் காணாமல் போனதாக, திருச்சி சிலை தடுப்பு பிரிவு போலீசில் புகார் தரப்பட்டது. இது தொடர்பாக கடந்த, 6ல் வெள்ளோடு பழைய ராஜா சுவாமி கோவிலில், போலீசார் ஆய்வு செய்தனர். அங்கு, நான்கு சிலைகளும், கோவிலு க்கு வெளியே மற்றொரு கோவிலில் இரண்டு சிலைகள், மற்ற எட்டு சிலைகள், புதிதாக கட்டிய ராஜா சுவாமி கோவிலில் இருந்ததும் தெரிந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி, புதிய கோவிலில் இருந்த எட்டு சிலைகளையும் எடுக்க, போலீசார் வந்தனர். ஒருமுறை எதிர்ப்பால் திரும்பினர். சில நாட்களுக்கு முன், மீண்டும் வந்து சென்றனர். இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று (செப்., 24ல்) காலை கோவிலுக்கு வந்தனர். புதிய கோவிலில் இருந்த, எட்டு சிலைகளையும் அகற்றி எடுத்தனர். கும்பகோணம் தனி நீதிமன்றத்தில் ஒப்படைத்த பின், கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், சிலைகள் வைக்கப்படும், என, திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., சந்திரசேகரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !