சபரிமலைக்கு செல்ல மாட்டோம்: கங்காதரேஸ்வரர் கோவிலில் பெண்கள் சத்தியம்
ADDED :2622 days ago
புரசைவாக்கம், கங்காதரேஸ்வரர் கோவிலில், சபரிமலைக்கு, நாங்கள் செல்ல மாட்டோம் என, பெண்கள் சத்தியம் செய்தனர்.சபரிமலை, அய்யப்பன் கோவிலுக்கு, பெண்கள், வயது பாகுபாடின்றி செல்லலாம் என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, புரசைவாக்கம் மற்றும் சூளை பகுதியைச் சேர்ந்த பெண்கள், கங்காதரேஸ்வரர் கோவிலில் ஒன்று கூடினர்.அவர்கள், தங்கள்கைகளில் விளக்கேற்றி, சபரிமலைக்கு, நாங்களும், எங்கள் வீட்டு பெண்களும் செல்ல மாட்டோம் என, சத்தியம் செய்தனர்.