கதை சொல்லும் கருவறை
ADDED :2606 days ago
ஒரு சமயம் பாற்கடலில் பெருமாள் துயிலும் போது அரக்கர்களான மது, கைடபர் ஆகியோர் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களைக் கடத்த முயன்றனர். அரக்கர்களைக் கண்டு பயந்த பூதேவி பெருமாளின் திருவடியிலும், ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும் தஞ்சம் அடைந்தனர். அரக்கர்களால் பெருமாளின் நித்திரை கலையக் கூடாதே என வருந்திய ஆதிசேஷன், தன் வாயிலிருந்து விஷத்தை உமிழ அவர்கள் பயந்தோடினர். விஷயம் அறிந்த பெருமாள் ஆதிசேஷனின் செயலைப் பாராட்டினார். இந்த வரலாற்றின் பின்னணியில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பெருமாள் கோயில் கட்டப்பட்டுள்ளது. கதை சொல்லும் கருவறையாக மலையுடன் கூடிய குகையில் சன்னதி உள்ளது. புராண காலத்தில் திருமெய்யம் எனப்பட்ட இத்தலம் தற்போது ’திருமயம்’ எனப்படுகிறது.