வெள்ள விநாயகர் கோயில்
ADDED :2675 days ago
தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள வல்லப விநாயகர் கோயில், பேச்சு வழக்கில் ‘வெள்ளை விநாயகர் கோயில்’ எனப்படுகிறது. வல்லபை என்பவள் ஒரு சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சிவனிடம் முறையிட்டனர். மனித உடலும், மிருக முகமும் கொண்ட ஒருவரால்தான் தன் சாபம் நீங்கும் என்று அவளுக்கு சாபிவிமோசனம் அளிக்கப்பட்டது. அவள் பல அசுரக் குழந்தைகளைப் பெற்றாள். விநாயகர் அவளை அடக்கி மடியில் இருத்திக் கொண்டார். அவளது கோரிக்கைக்கு இணங்க, வல்லப விநாயகர் என்ற பெயரும் பெற்றார். இந்தக் கோயில் மூலவருக்குள் வல்லபதேவி ஐக்கியமாகி தத்ருபமாக காட்சி தருவதாக ஐதிகம். உற்சவ விநாயகர் வல்லபை சகிதமாக அருள்வது சிறப்பு.