உள்ளூர் செய்திகள்

சிவராத்திரி

சிவராத்திரி என்பது எம்பெருமான் சிவனுக்கு உரியது. நவராத்திரி என்பது அம்பாளுக்கு உரியது. இவ்விரண்டு பண்டிகைகளுமே இரவில் கொண்டாடப்படுபவைகளாகும்.

மஹாசிவராத்திரி:

மாசி மாதம் கிருஷ்ணபக்ஷம் - சதுர்த்தசி திதி, திருவோண நட்சத்திரத்தில் வருவதாகும்.

ஐந்துவகை சிவராத்திரிகள்

1. நித்ய சிவராத்திரி
2. பக்ஷ சிவராத்திரி
3. மாத சிவராத்திரி
4. யோக சிவராத்திரி
5. மஹா சிவராத்திரி

1) நித்ய சிவராத்திரி என்பது
ஒவ்வொரு சதுர்த்தசியிலும் சிவபூஜை செய்வது வருடத்தில் இருபத்தி நான்கு முறை சிவபூஜை செய்வது ஆகும்.

2) பக்ஷ சிவராத்திரி என்பது
தை மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தில் பிரதமை முதல் பதிமூன்று நாட்கள் ஒரு வேளை (தினமும்) பூஜித்து, சதுர்த்தசியில் பூஜை செய்துமுடிப்பது ஆகும்.

3) மாத சிவராத்திரி என்பது
கிருஷ்ண சதுர்த்தசி 14 வது திதி யன்றும்
பங்குனி மாதத்தில் முதலில் வரும் திருதியை 3வது திதி என்றும்
சித்திரை மாதத்தில் கிருஷ்ண அஷ்டமி 8 வது திதி அன்றும்
வைகாசி மாதத்தில் முதலில் வரும் அஷ்டமி 8வது திதி அன்றும்
ஆனி மாதத்தில் சுக்ல சதுர்த்தசி 4வது திதி அன்றும்
ஆடி மாதத்தில் கிருஷ்ண பஞ்சமி 5வது திதி அன்றும்
ஆவணி மாதத்தில் சுக்ல அஷ்டமி 8 வது திதி அன்றும்
புரட்டாசி மாதத்தில் முதல் திரயோதசி 13 வது திதி அன்றும்
ஐப்பசி மாதத்தில் சுக்ல துவாதசி 12 வது திதி அன்றும்
கார்த்திகை மாதத்தில் முதல் சப்தமியும், அஷ்டமியும் 7வது 8 வது திதி களில்
மார்கழி மாதத்தில் இரண்டு பக்ஷ கிருஷ்ண, சுக்ல சதுர்தசிகளில் 14வது திதி களில்
தை மாதத்தில் சுக்ல திருதியை 3 வது திதி அன்றும் சிவ பூஜை செய்வதாகும்.

4) யோக சிவராத்திரி என்பது
சோம வாரத்தன்று அறுபது நாழிகை அமாவாசை இருந்தால் அன்றைய தினம் சிவபூஜை செய்வதாகும்.

5) மஹாசிவராத்திரி என்பது
மாசி மாதத்தில் கிருஷ்ண சதுர்த்தசியன்று சிவபூஜை செய்வதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !