ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி விழா அக்.9 ல் துவக்கம்
ADDED :2561 days ago
ராமநாதபுரம்: ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்.9ல் துவங்கவுள்ளது.
கோவை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் துவக்கி வைக்கிறார். தினமும் அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடக்கிறது.
தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளுகிறார். மாலை 6:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ராஜேஸ்வரி நாச்சியார், நிர்வாக செயலர் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு செய்து வருகின்றனர்.