மனத்தை ஆள்வது முழுவெற்றி!
மனம் என்பது ஒரு பொதுச்சொல். அதற்குள் அடங்கியிருக்கும் அம்சங்கள் பல. ஆணவம்... ஆசை... மாயை... சமுதாயம் ..... வீதி... தெய்வங்கள்.... என்னும் பல அம்சங்களை உள்ளடக்கியுள்ள ஓர் அலை இயக்கமே மனம். மாயை என அழைக்கப்பெறும் அன்னை ஆதிபராசக்திதான் மனத்தை ஆளும் அரசி. மனத்தை உணர்ந்து ஆளும் வல்லமை பெற்றோர் மட்டுமே புவி வாழ்க்கையில் முழு வெற்றி காண இயலும். மணத்தை வென்றோர் மட்டுமே புவி வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற முடியும். மனத்தில் பதிவாகும் நற்பண்புகளும் அவற்றால் விளையும் நல்வினைப் பதிவுகளுமே புண்ணியம், பொறாமை, கோபம், வஞ்சனை, பேராசை போன்ற தீயபண்புகளும் அவற்றால் விளையும் தீவினைப் பதிவுகளுமே பாவம் . தீவினைப் பதிவுகளின் பெருக்கத்தால் வருவதே அஞ்ஞானம். அஞ்ஞானத்தின் விளைவே உடல் நோய்கள்... வறுமை... மனத்துன்பங்கள்... துர் அதிர்ஷ்டங்கள்..... முதுமை... மரணம். தீய பண்புகள், சூழ்நிலையின் காரணமாகத் தாமாக உற்பத்தியாகும் களைகள்..... முட்புதர்கள். நல்ல பண்புகள், தன் உணர்வு அதாவது (குஞுடூஞூ ணூஞுச்டூடித்ச்tடிணிண) காரணமாக நாமாக முயற்சி செய்து உருவாக்கும் பூந்தோட்டம்... பழத்தோட்டம்..... நெல்வயல்.
சாதி..... மதம்.... மொழி.... இனம்.... பணம்..... எனப் பல வழிகளில் தோன்றும் வேற்றுமை உணர்ச்சியை வென்றால் மனம் மகத்தான சக்தியைப் பெறும். கிடைத்தால் நல்லது; கிடைக்காவிட்டால் ரொம்ப நல்லது! என்ற சமநிலை உணர்வுடன் வருவதை ஏற்றுக்கொள்ளும் பக்குவதைப் பெற்ற மனம் இறுக்கம் அதாவது ( கூஞுணண்டிணிண) அடையாது.