ஒரு வருடத்தில் ஒரு நாள்
ADDED :2598 days ago
சில திருக்கோயில்களில் சில நிகழ்ச்சிகள் வருடத்தில் ஒரு நாள் மட்டும் நடக்கும். அந்நாட்களில் அங்கு சென்று கண்டு தொழுவதற்கு வசதியாக... சிம்மாசலம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் மற்றைய தினங்களில் பூரண சந்தனக் காப்புடன் காட்சிதரும் எம்பெருமான் சித்திரை மாதம் அக்ஷய திருதியை தினம் மட்டும் சந்தனம் களையப்பெற்று நிஜ ரூப சேவை தருவார். அக்ஷய திருதியைக்கு முதல்நாள் பழைய சந்தனக் காப்பு. அக்ஷய திருதியை அன்று சந்தனம் நீக்கிய நிஜரூப சேவை. மறுநாள் புதிய சந்தன முழுகாப்புடன் தரிசனம்.