கருத்தமடை அய்யனார் கோயிலில் ஊர் பொங்கல்
ADDED :2658 days ago
அழகன்குளம்:அழகன்குளம் கருத்தமடை அய்யனார் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஊர் பொங்கலிட்டு வழிபாடு நடந்தது. அழகியநாயகி அம்மன் வார வழிபாடு மாதர் சங்க தலைவி பிரேமா தலைமையில் மாலையில் வழிபாட்டுடன் விழா துவங்கியது. ஊர் மக்கள் அனைவரும் பொங்கலிட்டு அய்யனாரை வழிபட்டனர். இந்து சமூக சபை தலைவர் ராமமூர்த்தி, நிர்வாகிகள் முத்துரெத்தினம், நம்புசுப்பிரமணி, வெற்றிச்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.